மகளிர் சாம்பியன்ஸ் தொடர் இந்தியாவுக்கு மாற்றம்!

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதலாவது ICC மகளிர் சாம்பியன்ஸ் தொடர் தற்போது இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை
மும்பை, இந்தியா

ஆறு அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடர் T20 போட்டித் தொடராக நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரை நடத்துவதற்காக இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ICC-யின் மதிப்பீட்டுக்குப் பின்னர் இந்தியா தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் கிரிக்கெட் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முடிவை ICC நிர்வாகக் குழு செப்டம்பர் 1ஆம் திகதி உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore