புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை தண்டிப்பது அல்லது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காத காரணத்திற்காக பிள்ளைகளை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்த வேண்டாம் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அதேபோன்று, மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை பயன்படுத்தி அவர்களுக்கு அவமானம் அல்லது அசௌகரியம் ஏற்படும் வகையில் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்களில் பதிவுகள் அல்லது பிரசாரங்களை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் சிறுவர் துன்புறுத்தலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

📌 பிள்ளைகளின் பெறுபேறுகளை விட அவர்களின் மனநலனும் பாதுகாப்பும் முக்கியம்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore