கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் இருந்து ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான பணம் பெற்றதாகக் கூறப்படும் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறுகிய காலத்திற்குள் கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பணம் வசூலித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தன்னை முன்னாள் கனேடிய தூதுவர் என அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபருக்கு எதிராக மேலும் சில நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





