நெருக்கடி காலத் தயார்நிலை: 86 டன் தங்கத்தை லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து


அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், தனது தங்கக் கையிருப்பின் ஒரு பகுதியை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து லண்டனுக்கு நெதர்லாந்து மாற்றியுள்ளது.

நெதர்லாந்து மத்திய வங்கியின் (DNB) தகவலின்படி, பல மாதங்கள் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த மொத்தம் 86 டன் தங்கம் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளது.

இதில் சுமார் 27 டன் தங்கக் கட்டிகள் நியூயோர்க் மற்றும் ஒட்டாவாவிலிருந்து நெதர்லாந்தின் Zeist நகருக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதே அளவிலான தங்கம் பின்னர் லண்டனுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள தங்கத்தைப் பொறுத்தவரை, நியூயோர்க்கில் தங்கத்தை விற்பனை செய்து, அதற்கு இணையான அளவு தங்கத்தை லண்டனில் மீண்டும் கொள்வனவு செய்துள்ளதாக DNB தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள இங்கிலாந்து வங்கியில் (Bank of England) வைக்கப்படும் தங்கம் சர்வதேச சந்தையில் எளிதாக வர்த்தகம் செய்யக்கூடியதாகக் கருதப்படுவதால், நெருக்கடியான சூழ்நிலையில் அதனை விரைவாக பயன்படுத்த முடியும் என நெதர்லாந்து மத்திய வங்கி விளக்கமளித்துள்ளது.

இந்த நடவடிக்கை தங்களது அவசரகாலத் தயார்நிலை மற்றும் பொருளாதார நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்துவதற்கானது என DNB தலைவர் Olaf Sleijpen தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு இறுதியில் நெதர்லாந்திடம் 612.4 டன் தங்கக் கையிருப்பு இருந்ததாகவும், அதன் மதிப்பு சுமார் 72.2 பில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்திற்குப் பின்னர், நியூயோர்க் மற்றும் ஒட்டாவாவில் வைக்கப்பட்டிருந்த நெதர்லாந்தின் தங்கத்தின் பங்கு தலா 18.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேவேளை, லண்டனில் உள்ள தங்கத்தின் பங்கு 18.1 சதவீதத்திலிருந்து 32.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore