22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு இன்று பிற்பகல் வரை அவகாசம்


22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது. விசாரணையை தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பில் மேலும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் இருப்பின் அவற்றை இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புடன் ஒத்துப்போகிறதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகரிடம் அனுப்பி வைக்கப்படும் எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் குறித்த சட்டமூலம் தொடர்பான அடுத்தகட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore