தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாகப் பிறந்துள்ள நைல் நீர்யானைக் குட்டிக்கு பெயர் சூட்டும் போட்டி பொதுமக்களின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளை நேசிக்கும் சிறுவர்கள் இந்த முயற்சியில் கலந்து கொண்டு, குட்டி நீர்யானைக்கு பொருத்தமான பெயர்களை முன்மொழியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔹 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.
🔹 பெயர் பரிந்துரைகளை அதிகாரப்பூர்வ இணையப் படிவம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
🔹 வனவிலங்குகள் மற்றும் மிருகக்காட்சிசாலையுடன் சிறுவர்களின் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
📝 ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவம் மூலம் பெயரை சமர்ப்பிக்கலாம்.





