கொழும்பு: செவித்திறன் குறைபாடு, பேச முடியாத நிலை அல்லது பார்வைக் குறைபாடு கொண்டவர்களும் பொலிஸ் அவசர சேவையை எளிதாக அணுகும் வகையில், 119 பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்கான பிரெயில் அடிப்படையிலான புதிய சேவை நாளை (04) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த புதிய சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கும் அவசரகால பொலிஸ் சேவைகளை சமமாக அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் இவ்வகையான சேவை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுவதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.





