குழந்தையின் டயப்பரில் தங்கம் கடத்தல்! – தந்தை கைது

இந்தியா: கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், 8 மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை மறைத்து கடத்த முயன்றதாக குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, தனது மூன்று குழந்தைகளுடன் வந்திருந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது 8 மாத குழந்தையின் டயப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையின் தாயார் அணிந்திருந்த சானிட்டரி நாப்கினில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சுமார் 1.7 கிலோ தங்கமும் மற்றொரு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைக்குழந்தையுடன் பயணிக்கும் குடும்பங்களிடம் விமான நிலைய சோதனை குறைவாக இருக்கலாம் என்ற எண்ணத்தில், தங்கத்தை மறைத்து கடத்த முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தங்கக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய நபர்களை அடையாளம் காண விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore