புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வரும் 16 வயது கடல் சிங்கம்!

கொழும்பு – தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் உள்ள “Bom” எனப் பெயரிடப்பட்ட 16 வயது கடல் சிங்கம், புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது குணமடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக ஆறாத காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த Bom-க்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கால்நடை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன், தெஹிவளை விலங்கியல் பூங்கா மற்றும் பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது Bom படிப்படியாக குணமடைந்து வருகிறது.

முழுமையாக குணமடைந்த பின்னர் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

⚠️ தற்போது சிகிச்சை மற்றும் கண்காணிப்பு காரணமாக Bom பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore