அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்கள், இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாக இலங்கை பொலிஸாரால் இவர்கள் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அபுதாபியில் இருந்தபோது இடம்பெற்ற ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் CID அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் வெவ்வேறு பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore