நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது மின்னல் தாக்கம் – உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் நியூயோர்க், ஸ்டேட்டன் ஐலண்டில் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

Thomas Fahmy என்ற அந்த நபர் கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி, பல் மருத்துவரை சந்திக்கச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கண்களை கூசச் செய்யும் வெள்ளை வெளிச்சத்தை கண்டதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த கணமே அவர் நிலத்தில் விழுந்ததாகவும், இதுவரை வாழ்க்கையில் அனுபவிக்காத அதிர்ச்சியான உணர்வுகளை சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

சம்பவத்தை அவதானித்த ஒருவர் உடனடியாக அவசர சேவை இலக்கமான 911-க்கு அழைப்பு விடுத்து, அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, மின்னல் தாக்கத்தால் அவருக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

⚠️ மின்னல் தாக்கம் அரிதானதாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore