போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை இணையம் ஊடாக செலுத்துமாறு கூறி பொதுமக்களுக்கு போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும் இந்தச் செய்திகளில், போக்குவரத்து விதிமீறல் இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணம் செலுத்துவதற்காக வழங்கப்படும் போலியான இணைய இணைப்புகளில் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அட்டை விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றது.
இதுபோன்ற இணைப்புகளில் தகவல்களை பதிவு செய்த சிலர் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
🔴 பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை
இலங்கை போக்குவரத்து பொலிஸார், அபராதங்களை செலுத்துவதற்காக குறுஞ்செய்திகள் மூலம் தனியான இணையத்தள இணைப்புகளை அனுப்புவதில்லை.
அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்துமாறும், சந்தேகத்திற்கிடமான SMS மற்றும் இணைய இணைப்புகளை திறக்க வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
💳 உங்கள் வங்கி அட்டை தகவல்கள், OTP மற்றும் பிற ரகசிய தகவல்களை எந்தவொரு சந்தேகமான இணையத்தளத்திலும் உள்ளிட வேண்டாம்.
📞 மோசடியில் சிக்கியிருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கையாக இருங்கள்! ஆன்லைன் மோசடிகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.





