இது எத்தனையாவது சந்தர்ப்பம் தெரியுமா?

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான Wide-Body விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பானதாகக் கூறப்படும் 800,000 அமெரிக்க டொலர் இலஞ்ச விவகாரம் தொடர்பில், 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதாக பதிவான நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

🔹 2016 – Krrish தொடர்பான வழக்கு
🔹 2016 – HelloCorp / Gowers Corporation வழக்கு
🔹 2017 – ஹம்பாந்தோட்டை போராட்ட வழக்கு
🔹 2026 – SriLankan Airlines விமான கொள்வனவு தொடர்பானதாகக் கூறப்படும் இலஞ்ச வழக்கு

குறிப்பு: இவை குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே. குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் சட்டத்தின் பார்வையில் நிரபராதி.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore