உள்நாட்டில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட முதல் AK-203 “Sher” துப்பாக்கி

இந்தியாவில் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் AK-203 “Sher” துப்பாக்கி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா தொழிற்சாலையில் Indo-Russian Rifles Private Limited (IRRPL) நிறுவனம் இந்த துப்பாக்கியை தயாரித்துள்ளது. இதன் அனைத்து பாகங்களும் மூலப்பொருட்களும் இந்தியாவிலேயே பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷ்ய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட AK-203 துப்பாக்கிகள் கட்டப்படியாக உள்நாட்டுமயமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100% உள்நாட்டு பாகங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளமை முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

புதிய துப்பாக்கியில் வெடிப்புச் சுடுதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட துப்பாக்கிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2026 இல் இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக சோதனைகளுக்காக மேலும் பல மாதிரிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் பழைய INSAS துப்பாக்கிகளுக்கு மாற்றாக AK-203 துப்பாக்கிகளை பயன்படுத்தும் நோக்கில், 2021ஆம் ஆண்டு IRRPL நிறுவனத்துடன் 601,427 துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், AK-203 திட்டத்திற்குத் தேவையான 7.62×39 மில்லிமீட்டர் ரக வெடிமருந்துகளையும் உள்நாட்டிலேயே வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore