இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (11) இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்தார். எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 18ஆவது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா சென்றுள்ளார்.

புதுடெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த ரஷ்ய ஜனாதிபதியை இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார். அவரது வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இம்முறை BRICS உச்சி மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் Bharat Mandapam-இல் நடைபெறுகிறது. “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்ற தொனிப்பொருளின் கீழ் மாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டில் ரஷ்யா, சீனா, ஈரான், தென்னாபிரிக்கா உள்ளிட்ட BRICS நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுடன் தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026ஆம் ஆண்டு BRICS அமைப்பின் 20ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிலையில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore