ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் குறிப்பிடப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை நடத்தி வருகிறது.

கம்பஹா பகுதியில் அமைந்துள்ள ஆடம்பரக் குடியிருப்புத் தொகுதியில் சுமார் ரூ.3 கோடி பெறுமதியான வீடொன்று ஷிரான் பாசிக்கால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வீடு அவரது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக ஷிரான் பாசிக்கின் தந்தையை இன்று (11) CCIB முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore