ரயில் பாதையில் நடந்து சென்றபோது விபத்து; இரு பெண்கள் உயிரிழப்பு

களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதுகம பகுதியில் இருந்து அனுராதபுரம் புனித நகரில் நடைபெறவிருந்த மத நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மூவர், ரயில் நிலைய நடைமேடையை நோக்கி ரயில் பாதை வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அப்போது மருதானையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலில் அவர்கள் மோதியுள்ளனர். இதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது உறவுக்கார மகள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore