செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று (16) வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 9,181,696,250 நிதி வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது.
அதேவேளை, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 2,120,856,250 வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, இரண்டு கட்டங்களிலும் மொத்தம் 1,212,388 பயனாளி குடும்பங்களுக்கு ரூ.11,302,552,500 நிதி வழங்கப்படவுள்ளது.
பயனாளிகள் குறித்த கொடுப்பனவை நாளை (17) முதல் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.





