யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக, மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயது இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மானிப்பாய் போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்துள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திய பின்னர், இளைஞர் திடீரென கீழே சரிந்து விழுந்து அசைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.





