பயாகல, சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடற்பகுதியில் நீராடச் சென்ற 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
சிறிய பயாகல பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், மேலும் மூவருடன் இணைந்து கடற்கரையை ஒட்டியுள்ள பாறை அணைக்கு அருகில் நீராடிக் கொண்டிருந்தபோது, நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து காணாமல் போன மாணவனைத் தேடும் பணிகளை இலங்கை கடற்படையினர் விசேட நடவடிக்கையாக முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.





