20ஆவது ஆசிய விளையாட்டு விழா (Asian Games 2026) இன்று (19) ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பமாகியுள்ளது.
“Imagine One Asia” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இம்முறை ஆசிய விளையாட்டு விழா, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆசிய ஒலிம்பிக் பேரவையின் கீழ் உள்ள 45 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன், முதன்முறையாக ஆசிய அகதிகள் அணியும் இணைந்து மொத்தம் 46 அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கின்றன.
இம்முறை போட்டிகளில் 11,000-க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் மற்றும் சுமார் 6,000 அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 43 விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் 469 போட்டி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மேலும், Padel, Teqball, Surfing உள்ளிட்ட விளையாட்டுகளுடன், முதன்முறையாக Virtual Taekwondo உள்ளிட்ட புதிய போட்டிகளும் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இடம்பெறுகின்றன.
ஜப்பான் மூன்றாவது முறையாக ஆசிய விளையாட்டு விழாவை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 1958ஆம் ஆண்டு டோக்கியோவிலும், 1994ஆம் ஆண்டு ஹிரோஷிமாவிலும் ஆசிய விளையாட்டு விழா நடைபெற்றது.





