தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை பகுதிகளுக்கு இடையில் இன்று (21) காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் மேலும் சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மோட்டார் வாகனங்களும் 2 பேருந்துகளும் விபத்தில் சிக்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





