களுத்துறை, அகலவத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (20) மாலை சுமார் 6.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாணவனின் சகோதரரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து குறித்த மாணவன் படுக்கையின் கீழ் தூக்கி வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மாணவனின் தாயார் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.





