பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயம்: 2ஆம் இடம் பிடித்த அஜித் குமார் ரேசிங் அணி!

ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தின் GT3 Pro-Am பிரிவில் அஜித் குமார் ரேசிங் அணி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அஜித் குமார், கோபி டி ப்ரூக்கர், அயர்டன் ரெடன்ட், யானிக் ரெடன்ட் மற்றும் மிகேல் கிரெனியர் ஆகியோர் இணைந்த Ajith RedAnt Racing அணி, Mercedes-AMG GT3 EVO காரில் போட்டியிட்டது.

24 மணி நேரம் நடைபெற்ற இந்த கடினமான போட்டியில், அஜித் குமார் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாம் இடத்தையும், ஒட்டுமொத்த பந்தய தரவரிசையில் 5ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித் குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்தி தனது அணியினருடன் வெற்றியை கொண்டாடினார்.

மேலும், 2026 Michelin Creventic 24H European Series தொடரின் GT3 Pro-Am சாம்பியன்ஷிப்பில் அஜித் ரெட் ஆன்ட் ரேசிங் அணி மூன்றாம் இடத்தைப் பெற்றதாக அணியின் அதிகாரப்பூர்வ பதிவை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு முதல் சர்வதேச 24 மணி நேர கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித் குமார் ரேசிங் அணி, துபாய், முஜெல்லோ, ஸ்பா-பிரான்கோர்சாம்ப்ஸ் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட சுற்றுகளில் போட்டியிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore