ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்: 57.83% வாக்குகளுடன் முன்னிலை பெற்ற புதின் ஆதரவு கட்சி

ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஆரம்ப முடிவுகளின்படி, ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு ஆதரவான United Russia கட்சி 57.83% வாக்குகளைப் பெற்றுள்ளது.

95%க்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி 49.8% வாக்குகளைப் பெற்றிருந்தது.

மொத்தம் 450 உறுப்பினர்களைக் கொண்ட State Duma நாடாளுமன்றத்தில் 355 ஆசனங்களை United Russia பெறும் என ரஷ்ய மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பு பெரும்பான்மையை அந்தக் கட்சி தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் செப்டெம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

எனினும், தேர்தல் நடைபெற்ற அரசியல் சூழல் குறித்து சர்ச்சைகளும் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தலின் இறுதி முடிவுகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore