நாவல் பழம் விற்ற 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில், நாவல் பழம் விற்பனை செய்து வந்த 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (25) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில், பரந்தன்–பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குடமுருட்டி பகுதியில் நாவல் பழ விற்பனையில் ஈடுபட்டிருந்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் கிளிநொச்சி, உருத்திரபுரம் – எள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore