எல்ல, கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற 27 வயதான இத்தாலிய பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தனது நண்பருடன் கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில், அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
பின்னர் அவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.





