அரசுக்கு ரூ.47.9 இலட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது

முன்னாள் புத்தசாசன அமைச்சின் செயலாளர் கமல் பண்டார திஸாநாயக்க, அரசுக்கு சுமார் 47.9 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் புத்தகங்களை அச்சிடுவதற்கு அனுமதி வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த முறையற்ற அச்சிடும் நடவடிக்கையின் காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 4.79 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் CIABOC மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore