எதிர்வரும் 2026 நவம்பர் 1ஆம் திகதி முதல், குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பின்வரும் நடவடிக்கைகளின்போது TIN இலக்கம் அவசியமாகும்:
🔹 வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு ஆரம்பித்தல்
🔹 கட்டிட வரைபட அனுமதி பெறுதல்
🔹 மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல்
🔹 மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல்
🔹 காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்
🔹 வியாபாரத்தைப் பதிவு செய்தல்
🔹 இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்
🔹 கடன் அட்டையைப் பெறுதல்
குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமர்ப்பிக்கப்படும் TIN இலக்கம் செல்லுபடியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை TIN இலக்கம் பெற்றுக்கொள்ளாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் e-Services மூலம் விண்ணப்பித்து TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





