சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!

பொலன்னறுவை, அரலகங்வில – எல்லேவெவ பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, 5 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (23.10.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் எல்லேவெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரும், ஜா-எல பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான 5 வயது சிறுவனும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இருவரும் உடனடியாக தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காட்டு யானைகளிடமிருந்து காணியைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியதாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் காப்பாற்ற முயன்ற மற்றுமிருவர் மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில், தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் மின்சார வேலிகள் மனித உயிர்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுமக்கள் இவ்வாறான ஆபத்தான நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore