ஹபராதுவையில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்து – 6 பேர் காயம்; மூவர் கவலைக்கிடம்!

காலி, ஒக்டோபர் 25 – காலி, ஹபராதுவை பகுதியில் ரயில் கடவையில் பேருந்தொன்று ரயிலுடன் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 25) நண்பகல் வேளையில், கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் மூவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை

பேருந்து ரயிலுடன் மோதியமைக்கான காரணம் மற்றும் விபத்து இடம்பெற்ற சூழ்நிலைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore