பொகவந்தலாவையில் இறுதிச் சடங்கிற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை – கால்வாயில் சடலமாக மீட்பு

இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு, நேற்றிரவு (30) டு திரும்பிக்கொண்டிருந்த நபரொருவர், கெசெல்கமு ஓயாவுக்குச் செல்லும் நீரோடை கால்வாயிலிருந்து இன்று (31) சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (30) இரவு, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்டத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர், நடந்தே வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, அவர் மர்மமான முறையில் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பும் வழியில் அவர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore