அன்ஷத் அஹமட்
36 ஆண்டுகளாக வைத்தியத் துறையில் அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் பணியாற்றி இன்று ஓய்வுபெறும் வைத்தியர் A. அப்துல் கபூர் அவர்களைக் கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று (03) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபா சங்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர். நியாஸ் அஹமட் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
மொத்தமாக 36 ஆண்டுகள் வைத்தியராகப் பணியாற்றியுள்ள இவர், அதில் 23 ஆண்டுகள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தனது மருத்துவ சேவையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாக நோயாளிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவரின் மருத்துவப் பணியையும், சேவை மனப்பான்மையையும் பாராட்டும் வகையில் நிகழ்வின்போது நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பல தசாப்தங்களாக மருத்துவத் துறையில் ஆற்றிய அரும்பணிகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது ஓய்வுக்காலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு நிறைந்ததாக அமைய வாழ்த்துவோம்!





