சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய சிறுவர் நல மருத்துவ நிபுணராக டாக்டர் ஜெரார்ட் நியமனம்!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் நல மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், புதிய சிறுவர் நல மருத்துவ நிபுணராக (Consultant Paediatrician) டாக்டர் ஜெரார்ட் அவர்கள் இடமாற்றம் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அவரது வருகையானது சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலுள்ள குழந்தைகளுக்கு மேம்பட்ட சிறுவர் நல மருத்துவ சேவைகளை வழங்குவதில் முக்கியமான முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மருத்துவ நிபுணரின் வருகையுடன், வைத்தியசாலையின் வழமையான சிறுவர் நல மருத்துவ சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவை (Paediatric ICU) ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவசர மற்றும் விசேட சிறுவர் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளுக்காகப் பிரதேச மக்கள் தூர இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை குறைவதற்கான வாய்ப்பும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் ஜெரார்ட் அவர்களின் சேவையினால் சம்மாந்துறைப் பிரதேசத்தின் சிறுவர் மருத்துவப் பராமரிப்புத் துறை மேலும் வளர்ச்சியடைய எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore