நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக CPC அறிவிப்பு!

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

சில தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகத்தைக் குறைத்துள்ளதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தேவைக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், தொடர்ச்சியாக விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைப்பு

சில தனியார் நிறுவனங்கள் தமக்கு ஏற்படும் நட்டம் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் எரிபொருள் விநியோகத்தின் அளவைக் குறைத்துள்ளதாக CPC தலைவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அருகில் இல்லாத பகுதிகளில் இந்த விநியோகக் குறைபாடு காரணமாக வரிசைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிப்பதாக தனியார் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அனைத்து நிறுவனங்களும் இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன.

எனினும், சில பிரதேசங்களில் விநியோகக் குறைபாடு காரணமாக குறுகிய எரிபொருள் வரிசைகள் ஏற்படக்கூடும் என CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore