மின்னேரியாவில் கார் – டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து: பொலன்னறுவை வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

மின்னேரியாவில் கார் ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர வீதி விபத்தில், பொலன்னறுவை வைத்தியசாலையில் பணியாற்றிய 50 வயதுடைய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (நவம்பர் 06) வெள்ளிக்கிழமை மாலை, பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் 39ஆவது கிலோமீற்றர் தூண் அருகே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னேரியாவிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த கார், எதிர்த் திசையிலிருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இரு வாகனங்களையும் செலுத்திய சாரதிகளும் காயமடைந்த நிலையில், உடனடியாக ஹபரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், காரைச் செலுத்திச் சென்ற வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பொலன்னறுவை புதிய நகரப் பகுதியில் வசித்து வந்த 50 வயதுடைய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தின் சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore