ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததால் அடித்துச் செல்லப்பட்ட லொறி மீட்பு – 50 வீடுகள் நீரில் மூழ்கின

ஹட்டனில் இருந்து மகாவலி கங்கைக்கு நீர் பாயும் பிரதான ஆறான ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட லொறி ஒன்று மரத்தில் சிக்கியிருந்த நிலையில், அதன் உரிமையாளரால் இன்று (10ஆம் திகதி) அதிகாலை கண்டுபிடித்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, ஹட்டன் ரொதேஸ் (Rothes) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று நேற்று (09ஆம் திகதி) மாலை 5:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததால், ரொதேஸ் பகுதியின் தாழ்நிலப் பகுதிகளில் அமைந்திருந்த சுமார் 50 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், தங்களின் வீடுகளுக்குள் தேங்கியுள்ள நீர் மற்றும் சேற்றை அகற்றும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வெள்ளப் பெருக்கினால் வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உடமைகள் நாசமாகியுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore