நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் அடைமழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு;

நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (09) மாலை முதல் திறக்கப்பட்டுள்ளன. இதனால், சென் கிளையர் நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் பாயும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

அதேவேளை, நோர்வூட் பகுதியில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் தொடர்ந்து வான் பாய்ந்து வருகிறது. குறித்த நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் 125 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான் பாய்வதால், கெஹல்கமுவ ஓயா மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தொடர்ச்சியான மழை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் உயர்ந்துள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore