சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு கடந்த 10ஆம் திகதி பிரதேச சபையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல், பொதுமக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சபைக்கு வருகின்ற உறுப்பினர்கள் கட்சி ரீதியான அணுகுமுறைகளைக் கைவிட்டு, நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சபையில் பல்வேறு தீர்மானங்கள் முன்வைக்கப்படும்போது, அவற்றைக் கட்சி அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், உரிய முறையில் விவாதித்து, பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தீர்மானங்கள் தொடர்பில் கட்சி சார்ந்த மனநிலையின்றி செயற்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.





