இந்த ஆண்டுக்கான வருமான இலக்கை முன்கூட்டியே கடந்தது உள்நாட்டு இறைவரி திணைக்களம்!

2026ஆம் ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வருடாந்த வருமான இலக்கை, உள்நாட்டு இறைவரி திணைக்களம் முன்கூட்டியே கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு 2,402 பில்லியன் ரூபாய் வருமான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும், நவம்பர் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,441.9 பில்லியன் ரூபாய் வருமானத்தைத் திணைக்களம் ஈட்டியுள்ளது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 39.9 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் கிடைத்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் 491 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 115 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த முன்னேற்றமானது வரி நிர்வாகத்தின் வலிமை, வரி வருமானத்தைச் சேகரிப்பதில் காணப்படும் வினைத்திறன் மற்றும் வரிச் சட்டங்கள், விதிமுறைகளுக்கு அமைவாகச் செயற்படுவதில் மக்களிடையே காணப்படும் ஈடுபாடு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore