கிழக்கிலங்கையின் முதலாவது மொழியியல் கலாநிதியானார் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். றிஸ்வான்!

​மஜீட். ARM, இம்ரான்

​கிழக்கிலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, சம்மாந்துறையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.எஸ்.எம். றிஸ்வான் அவர்கள் கிழக்கிலங்கையின் முதலாவது மொழியியல் கலாநிதி (Ph.D. in Linguistics) பட்டம் பெற்று பிராந்தியத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தற்போது இரத்தினபுரி இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஆங்கில மொழித்துறை தலைவராகக் கடமையாற்றும் இவர், “தொழில்முறை எழுத்தில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பவர்களின் இலக்கண பிழைகளை குறைத்தல் – (உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களிடையே பகுப்பாய்வு மூலம் ஒரு ஒப்பீட்டு ஆய்வு)” என்ற தலைப்பில் தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 158ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் வைத்து அவர் இக்கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

​கலாநிதி எம்.எஸ்.எம். றிஸ்வான் அவர்களின் கல்விப் பயணம் இளங்கலை முதல் மிகச் சிறந்த சாதனைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவர் தனது முதலாவது இளங்கலைப் பட்டத்தை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தை பிரதான பாடமாகக் கற்று நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் ‘இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்பித்தல்’ என்ற விசேட பட்டபின் கல்வி டிப்ளோமாவை பெற்றுக் கொண்டதுடன், களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் தனது முதுகலை (MA) மற்றும் தத்துவ முதுகலை (M.Phil.) ஆகிய பட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

​இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு, கடந்த 2008.07.18 அன்று நிரந்தர ஆங்கில ஆசிரியராகத் தனது கற்பித்தல் சேவையை ஆரம்பித்த இவர், கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம் காரணமாக 2019ஆம் ஆண்டு சம்மாந்துறை வலயத்திற்கான ஆங்கில பாட வளவாளராக நியமிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

பின்னர், 2019 செப்டம்பர் முதல் இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்து, தற்போது இரத்தினபுரி உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆங்கில மொழித்துறை தலைவராக மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.

​இவர் சாய்வுப்போடியாரின் பேரன் மர்ஹூம் அல்ஹாஜ் மீரா சாஹிப் மற்றும் மோதிநார்ர சிவத்தம்மாட மகள் மர்ஹூமா ஹாஜியாணி ஆசியா உம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வர் ஆவார்.

இவர் ஐப்போடியாரின் பேரன் அல்ஹாஜ் கோஸ் முகமட் மற்றும் இஸ்மாலெப்பை (வட்ட விதானை) ன் மகள் ஹாஜியாணி பஷீரா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட மகள் ஹாஜியானி அனுஷா பானுவை 2009 ம் ஆண்டு கரம் பிடித்து அப்துல்லா, பாத்திமா, முஹம்மட் ஆகிய மூன்று குழந்தைகளின் அன்புத் தந்தையாவார்.

கிழக்கு மாகாணத்திற்கும் சம்மாந்துறை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள கலாநிதி எம்.எஸ்.எம். றிஸ்வான் அவர்கள், எதிர்காலத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று, அவர்தம் கல்விச் சேவை தேசத்திற்கும் முழு உலகிற்கும் சென்றடைய வேண்டும் எனப் பிராந்திய மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore