பஹ்ரைனில் கவனம் ஈர்த்த இலங்கை மாம்பழ வகைகள்

பஹ்ரைனில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மாம்பழ விழாக்களில் இலங்கையின் பல்வேறு மாம்பழ வகைகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் தனது பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனங்களை இலங்கையிலிருந்து மாம்பழங்கள் மற்றும் பிற பழ வகைகளை இறக்குமதி செய்ய ஊக்குவித்து வருகிறது.

இதன்படி, பஹ்ரைனின் மிகப்பெரிய வர்த்தக சங்கிலிகளில் ஒன்றான LuLu Hypermarket தனது “Mango Mania” நிகழ்ச்சியின் மூலம் கடந்த மே 23 ஆம் திகதி மாம்பழ பருவத்தை ஆரம்பித்தது. உலகின் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மாம்பழங்களுடன் இலங்கை மாம்பழங்களும் முக்கிய இடம் பெற்றன.

அதேபோன்று, ஜூன் 4 ஆம் திகதி Al Jazira Supermarket ஏற்பாடு செய்த “The Great Mango Football Fiesta” நிகழ்விலும் இலங்கை மாம்பழங்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டன.

இந்திய, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் மாம்பழங்களுடன் இலங்கையின் மாம்பழ வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

விழாவின் சிறப்பு அம்சமாக, இலங்கை மாம்பழங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இலங்கை உணவுகளின் நேரடி சமையல் காட்சியும் இடம்பெற்றது.

மேலும், சிலோன் தேயிலை உற்பத்திகளுக்கான காட்சியகங்களும் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையின் ஏற்றுமதி பொருட்களை பஹ்ரைன் சந்தையில் மேலும் பிரபலப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore