Apple நிறுவனத்தின் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படாத iPhone 18 Pro தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் ஹேக்கர் தாக்குதலால் கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் Tata Electronics நிறுவனத்தின் கணினி அமைப்பில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதன் மூலம், Apple-இன் விநியோகஸ்தர் பட்டியல், உதிரிப்பாக விவரங்கள் மற்றும் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டுவரும் வெளியிடப்படாத iPhone சாதனங்களின் படங்கள் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசிந்த தகவல்கள் டார்க் வெப் (Dark Web) தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது Apple நிறுவனத்தின் மிகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்படும் உற்பத்திச் சங்கிலி மற்றும் இந்தியாவில் விரிவடைந்து வரும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் Reuters செய்தி வெளியிட்டுள்ளது.





