வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒரு குழந்தை ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Reuters செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, மீட்கப்பட்ட சிறுவன் கிளெய்பர் மோரான் (Klieber Moran) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீட்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இது ஆறாவது நாளில் பதிவான ஒரே உயிர்வாழ்ந்த மீட்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jordan நாட்டின் மீட்பு குழுவின் உதவியுடன், லா குவைரா மாநிலத்தில் உள்ள Los Corales Garden கட்டிட இடிபாடுகளில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டதாக வெனிசுவேலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை வெனிசுவேலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. இதனால் கட்டிடங்கள் இடிந்து, ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
UN குழந்தைகள் நிதியம் (UNICEF) சார்பில் 47 மெட்ரிக் டன் அவசர உதவி பொருட்கள் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ உதவி பொருட்கள், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
அரசு தரவுகளின்படி, இதுவரை 1,900-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தொடர்ந்து இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்தவர்களை தேடும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.





