உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈக்வடார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி இறுதிப் 16 அணிகளுக்குத் தகுதி பெற்றதைத் தொடர்ந்து, மெக்சிகோ நகரில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கொண்டாட்ட நிகழ்வுகளின் போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் குழப்பம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில், மூச்சுத்திணறல் காரணமாக 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றொருவரும் பின்னர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மெக்சிகோ அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.





