உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD), 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான (Year of Assessment) வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான e-Service இணைய சேவை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, வரி செலுத்துவோர் பின்வரும் வரி அறிக்கைகளை இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்:
நிறுவன வருமான வரி (Corporate Income Tax – CIT)
கூட்டாண்மை வருமான வரி (Partnership Income Tax – PIT)
தனிநபர் வருமான வரி (Individual Income Tax – IIT)
எளிமைப்படுத்தப்பட்ட தனிநபர் வருமான வரி (Simplified IIT)
2026 நவம்பர் 30 ஆம் திகதி வரையிலேயே வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வரி தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் www.ird.gov.lk என்ற உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





