உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் நாடுகளில் இலங்கைக்கு 3ஆம் இடம்

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக் கொண்ட ‘நம்பியோ’ (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இது தெரியவந்துள்ளது.

இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன.

பயணத்திற்காகச் செலவிடப்படும் நேரம், அதற்காகச் செலவாகும் எரிபொருள் அளவு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மன உளைச்சல், கார்பன்-டை-ஒக்சைடு (CO2) வெளியேற்றம் மற்றும் போக்குவரத்து அமைப்பில் உள்ள திறமையின்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவுகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த குறியீடு, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்து நிலைமைகள் குறித்த விரிவான பார்வையை வழங்குகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore