- சம்மாந்துறை ஊடக மையம்!
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட காணொளி ஒன்றில், சம்மாந்துறை பகுதியில் சில இளைஞர்கள் தலைக்கவசம் (Helmet) அணியாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று மற்றும் நான்கு பேர் பயணித்ததுடன், வீதியை மறித்து பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் செயற்பட்டமை பதிவாகியிருந்தது.
குறித்த காணொளி நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியதுடன், போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன சட்டங்களை மீறிய பல இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கை,
SDIG திரு. வருண ஜயசுந்தர
DIG திரு. சுஜித் வேதமுல்ல
SSP திரு. KTPB. கஸ்தூரி ஆராச்சி
ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையில்,
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) CI நிசாந்த பிரதீப் குமார
போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி SI விஜயவர்தன
குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி SI சமீர
PCD 80294 தனுஷ்க
ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் வீதிகளில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் செயல்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், OIC CI நிசாந்த பிரதீப் குமார அவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பை ஏற்றதன் பின்னர், சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தயக்கமின்றி மேற்கொள்ளப்படும் என்பதையும் இந்த நடவடிக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.





