இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 47.5 இலட்சம் பயணிகள் இயக்கங்களை கையாண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விமான நிலையத்தின் தகவலின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில்,
மொத்த பயணிகள் இயக்கங்கள் – 4,748,481
விமான இயக்கங்கள் – 30,659
இடைநிலை (Transit) பயணிகள் – 424,856
என பதிவாகியுள்ளது.
இதே காலப்பகுதியில், 11,46,573 சுற்றுலாப் பயணிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் BIA விமான நிலையம்,
மொத்த பயணிகள் இயக்கங்கள் – 10,214,391
விமான இயக்கங்கள் – 95,629
Transit பயணிகள் – 946,811
என கையாண்டுள்ளது.
இலங்கையின் மக்கள், கலாசாரங்கள் மற்றும் வாய்ப்புகளை இணைக்கும் முக்கிய மையமாக BIA தொடர்ந்து செயற்பட்டு வருவதுடன், நாட்டின் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.





