இலங்கையர் ஒருவர் நியூசிலாந்தில் கார் ஓடோமீட்டர் மோசடி வழக்கில் அபராதம்

நியூசிலாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமாக குறைத்து விற்பனை செய்தமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, Sachis Holdings Ltd நிறுவனத்தால் இயக்கப்பட்ட Carporium என்ற வாகன விற்பனை நிலையம், 2024 பிப்ரவரி மாதம் Toyota RAV4 ரக வாகனமொன்றை NZ$24,000க்கு விற்பனை செய்துள்ளது.

ஒரு வருடத்திற்கு பின்னர் வழக்கமான சேவை பரிசோதனையின் போது, வாகனத்தின் ஓடோமீட்டர் பதிவும், சேவை வரலாற்றுப் பதிவும் பொருந்தாதது கண்டறியப்பட்டது.

விசாரணையில், ஏலத்தில் வாங்கப்பட்டபோது வாகனம் 150,031 கிலோமீற்றர் பயணித்திருந்த நிலையில், பின்னர் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யும்போது அது 119,244 கிலோமீற்றர் என மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மூலம் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான பயண தூரம் மறைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, நியூசிலாந்தின் Business, Innovation and Employment அமைச்சு (MBIE) மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், ஓடோமீட்டர் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தீர்ப்பளிக்கப்படும் முன், Carporium நிறுவனம் வாகனத்தை அதன் ஆரம்ப விற்பனை விலையான NZ$24,000க்கு மீள வாங்க ஒப்புக்கொண்டது.

மேலும், நிறுவனத்தின் பணிப்பாளர் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக NZ$1,000 இழப்பீடு வழங்கவும், நிறுவனத்திற்கு NZ$5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட MBIE, ஓடோமீட்டர் மோசடி வழக்கில் வெற்றிகரமாக நிறைவு பெற்ற முதல் வழக்காக இது அமைந்துள்ளதாகவும், இத்தகைய மோசடிகள் வாகனத்தின் உண்மையான மதிப்பு, நிலை மற்றும் பராமரிப்பு தேவைகள் குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்துவதால், எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore